Posts

இந்திய தேசியக் கொடி

இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், சூலை 22 , 1947 அன்று ஏற்கப்பட்ட இந்திய நாட்டின் கொடியாகும். சனவரி 26 , 1950 -ல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது.  நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் எனக் கூறப்படும் 24 ஆரங்களைக் கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தைக் கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.   இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் சுரையா தியாப்ஜி ஆவார். [2] , ஆனால் பொதுவாக பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்ததாகச் சொல்லப்படும் கொடியில் இராட்டை சின்னம் இடம் பெற்றிருக்கும். [3] அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். த...

கண்மணியின் காதல் (சிறுகதை)

Image
   கண்மணியின் காதல் - 1 ஒரு அழகான கிராமத்தில் கண்மணி என்ற பெண் இருந்தாள்.. அவளுடைய பெற்றோர்கள் அவளை அதிக செல்லமாக வளர்த்தினர்கள்.  அவளும் மகிழ்ச்சியுடன் இருந்தாள்... கண்மணி பற்றி சொல்லி ஆகவேண்டும்.. "கண்டவர் மயங்கும் பேரழகி...  வில்வளைந்தப் புருவம்... பால் வண்ண கிணற்றில் பளபளக்கும் கருவிழி... படபடவென்று வெடிக்கும் பட்டாசு பேச்சு... ஆழிப்பெருங்கடல் ஆழம்  கருப்பு கூந்தல்... வெயில் தாங்காத வெட்கப்படும் மேனி... இரு மலைகளின் மத்தியில் இருள் சூழ்ந்த பாலைவனம் நெற்றி... சிவந்த காரமான மிளகாய் பழம் மூக்கு.. சீனிசர்க்கரை  உதடு.. இப்படி கண்மணியை வர்ணிக்க தமிழ் எழுத்துகள் போதாது... அவள் கனவில் எப்பொழுதும் ஒரு மாயவன் வருவான். அவனை அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.. அவன் மீது காதல் கொண்டு மயங்கினாள் அவளின் கனவில் மட்டும் வந்த அந்த மாயவன்... நாள் முழுவதும் நினைவில் வர ஆரம்பித்தான்.  எப்பொழுதும் அவன் நினைவுதான்... இந்த கனவு மாயவன் பற்றி யாரிடமும் அவள் கூறவில்லை...                    கண்மணியின் கனவு தொடரும்.....

சமத்தூர் ஜமீன் பங்களா ❤❤பொள்ளாச்சி😍 கோவை மாவட்டம் 😍

Image