கண்மணியின் காதல் (சிறுகதை)
கண்மணியின் காதல் - 1 ஒரு அழகான கிராமத்தில் கண்மணி என்ற பெண் இருந்தாள்.. அவளுடைய பெற்றோர்கள் அவளை அதிக செல்லமாக வளர்த்தினர்கள். அவளும் மகிழ்ச்சியுடன் இருந்தாள்... கண்மணி பற்றி சொல்லி ஆகவேண்டும்.. "கண்டவர் மயங்கும் பேரழகி... வில்வளைந்தப் புருவம்... பால் வண்ண கிணற்றில் பளபளக்கும் கருவிழி... படபடவென்று வெடிக்கும் பட்டாசு பேச்சு... ஆழிப்பெருங்கடல் ஆழம் கருப்பு கூந்தல்... வெயில் தாங்காத வெட்கப்படும் மேனி... இரு மலைகளின் மத்தியில் இருள் சூழ்ந்த பாலைவனம் நெற்றி... சிவந்த காரமான மிளகாய் பழம் மூக்கு.. சீனிசர்க்கரை உதடு.. இப்படி கண்மணியை வர்ணிக்க தமிழ் எழுத்துகள் போதாது... அவள் கனவில் எப்பொழுதும் ஒரு மாயவன் வருவான். அவனை அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.. அவன் மீது காதல் கொண்டு மயங்கினாள் அவளின் கனவில் மட்டும் வந்த அந்த மாயவன்... நாள் முழுவதும் நினைவில் வர ஆரம்பித்தான். எப்பொழுதும் அவன் நினைவுதான்... இந்த கனவு மாயவன் பற்றி யாரிடமும் அவள் கூறவில்லை... கண்மணியின் கனவு தொடரும்.....