கண்மணியின் காதல் (சிறுகதை)
கண்மணியின் காதல் - 1
ஒரு அழகான கிராமத்தில் கண்மணி என்ற பெண் இருந்தாள்..
அவளுடைய பெற்றோர்கள் அவளை அதிக செல்லமாக வளர்த்தினர்கள்.
அவளும் மகிழ்ச்சியுடன் இருந்தாள்...
கண்மணி பற்றி சொல்லி ஆகவேண்டும்..
"கண்டவர் மயங்கும் பேரழகி...
வில்வளைந்தப் புருவம்...
பால் வண்ண கிணற்றில்
பளபளக்கும் கருவிழி...
படபடவென்று வெடிக்கும்
பட்டாசு பேச்சு...
ஆழிப்பெருங்கடல் ஆழம்
கருப்பு கூந்தல்...
வெயில் தாங்காத
வெட்கப்படும் மேனி...
இரு மலைகளின் மத்தியில்
இருள் சூழ்ந்த பாலைவனம் நெற்றி...
சிவந்த காரமான மிளகாய் பழம் மூக்கு..
சீனிசர்க்கரை உதடு..
இப்படி கண்மணியை வர்ணிக்க தமிழ் எழுத்துகள் போதாது...
அவள் கனவில் எப்பொழுதும் ஒரு மாயவன் வருவான்.
அவனை அவளுக்கு ரொம்ப பிடிக்கும்..
அவன் மீது காதல் கொண்டு மயங்கினாள்
அவளின் கனவில் மட்டும் வந்த அந்த மாயவன்... நாள் முழுவதும் நினைவில் வர ஆரம்பித்தான்.
எப்பொழுதும் அவன் நினைவுதான்...
இந்த கனவு மாயவன் பற்றி யாரிடமும் அவள் கூறவில்லை...
கண்மணியின் கனவு தொடரும்..
__________________________________________
கண்மணியின் காதல் - 2
கனவில் வரும் மாயவனை நேரில் தேட ஆரம்பித்தாள்...
தனது கிராமத்தில் அப்படி யாரும் இல்லை..
பெற்றோர் எங்கு சென்றாலும் அவளும் அவர்களுடன் சென்றாள்
மாயவணை தேடினாள்...
கோயில்கள், ஊர் திருவிழாக்கள், கடைவீதி, உற்றார் உறவினர் நண்பர்கள் வீடு, பக்கத்து கிராமம், பக்கத்து ஊர்....
எங்கும் மாயவன் இல்லை..
ஆனால் தினம் தினம் கனவில் தோன்றி
அவளின் மாயவானை பார்க்கும் ஆசையை மேலும் மேலும் தூண்டிகிறன்..
கண்மணி மாயவனாய் தேடி தேடி சோர்வு அடைந்து விட்டாள்...
கண்மணியின் பெற்றோகள் அவளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்தனர்..
கண்மணிக்கு ஏற்கனவே 3, 4 காதல் கடிதம் வந்து இருக்கிறது,.
இதில் என்ன அதிசியம் இருக்கு!!!
அழகான பெண்ணுக்கு காதல் கடிதம் வராமல் இருந்தால் தான் அதிசியம்...
ஆனால் அவள் காதல் கடிதத்தை ஏற்கவில்லை.. தன் பக்கம் அவர்கள் திரும்பி பார்க்கா வண்ணம் தக்க பதில் அடி குடுத்து அனுப்பி வைத்தாள்..
கண்மனிக்கு தேவை மாயவன்...
மாயவனின் காதல்...
- மாயவனின் காதல் தொடரும்
_________________________________________
கண்மணியின் காதல் - 3
நாட்கள் நகர்ந்தது..
மாயவனின் மேல் காதலும் அதிகமானது..
மாயவன் என்ற ஒருவன் இருப்பதை நம்புவதா? வேண்டாமா? என்று பெரும் குழப்பம்...
வீட்டில் பெற்றோர்களும் திருமணத்திற்கு அவசரப்படுத்தினார்கள்..
கண்மணிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...
"யாரையாவது காதலிக்கிறாயா?
சொல்? அவரையே திருமணம் செய்து வைக்கின்றோம்" என்று பெற்றோர்கள் கேட்டு விட்டனர்
கனவில் வரும் மாயவன் பற்றி எப்படி அவர்களிடம் கூறுவது..
ஒருபுறம் மாயவனின் காதல்...
மறுபுறம் பெற்றோர்களின் அன்பு....
தவியாய்த் தவித்தாள் கண்மணி...
- கண்மணியின் தவிப்பு தொடரும்
__________________________________________
கண்மணியின் காதல் - 4
கண்மணியே பெண் பார்க்க பல மாப்பிள்ளைகள் வந்து சென்றனர்..
அனைவருக்கும் கண்மணியை பிடித்தது..
ஆனால் கண்மணி தான் "மாயவன் வருவான், கரம் பிடிப்பான்" என்ற நம்பிக்கையில் அனைவருக்கும் மறுப்பு சொல்லி விட்டாள்..
கண்மணியின் வயது அதிகமாகிக்கொண்டே போகிறது என்று பெற்றோர்கள் கவலையில் இருந்தனர்..
பெற்றோர்கள் சோகமாக இருப்பதை கண்மணிக்கு கண்ணில் பார்க்க முடியவில்லை..
அவளும் சோகத்தில் இருந்தாள்..
அவளுக்கு ஒரு அறுதல் கனவில் தோன்றும் மாயவன்...
மாயவன் மேல் உள்ள காதல் கோபமாக மாறியது..
"உண்மையிலேயே நீ இருப்பதாக இருந்தால், நேரில் வா" என்று கோபித்துக் கொண்டாள்..
மாயவன் மேல் எத்தனை கோபம் இருந்தாலும் அவன் கனவில் வந்து சின்ன சிரிப்பு சிரித்தால் போதும் கண்மணி மயங்கி விடுவாள்...
- மயக்கம் தொடரும்
________________________________________
கண்மணியின் காதல் - 5
உண்மையில் மாயவனுக்கு உருவம் கொடுத்தது கண்மணி தான்..
ஆம் அவளின் கற்பனையில் ஒரு ஆண் மகன் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து கனவு வழியாக பார்த்தாள்..
"மாயவன்" என்பது வெறும் கற்பனையே என்று அவள் மனது ஏற்றுக்கொள்ள தயாரானது...
"மாயவன்" என்பவன் ஒருவன் உண்மையில் இல்லை...
"அவன் கற்பனை"
ஆனால் மாயவன் மேல் வைத்திருந்த காதல் உண்மை...
மாயவனின் காதலை விட பெற்றோர் மீது வைத்த அன்பு கண்மணியே ஒரு முடிவு செய்ய வற்புறுத்தியது மனது....
திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாள்....
பெற்றோர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர்..
- மகிழ்ச்சி தொடரும்
__________________________________________
கண்மணியின் காதல் - 6
கிராமமே திருக்கோலம்...
மகிழ்ச்சி வெள்ளத்தில் கிராம மக்கள்...
சொர்க்கமே மண்ணில் வந்து விட்டதாக கண்மணியின் பெற்றோர்கள் நினைத்துக் கொண்டனர்...
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரும் கண்மணிக்கு வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்...
அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி...
கண்மணிக்கு மட்டும் மகிழ்ச்சி துளியும் இல்லை...
யாரும் இல்லாத இடத்தில் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்த
இவள் சோகமாக இருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி நடந்துகொண்டாள்..
மாயவன் மேல் வைத்த அன்பு, தோல்வி அடைவதை இவள் மனதில் ஏற்றுக் கொள்ளவில்லை..
இருந்தாலும் பெற்றோருக்காக சம்மதம் தெரிவித்ததை நினைத்து வருத்தம் உடன் இருந்தாள்..
இந்த நிமிடம் மாயவன் தோன்றினாலும் அவனை திருமணம் செய்து கொள்ள தயாராகவே இருந்தால் கண்மணி...
ஆனால் இனி அது நடக்காது ஏனென்றால் கண்மணியின் திருமணத்திற்கு சில நாட்களே இருக்கின்றன..
திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது...
மாப்பிள்ளை வீட்டாரும் வந்து கொண்டு இருந்தனர்...
இதையெல்லாம் பார்க்கும்போது கண்மணிக்கு மனதில் ஒரு நடுக்கம்...
மாயவனை ஏமாற்றிய குற்ற உணர்வு...
"தவறு.."
மாயவன் தான் இவளை ஏமாற்றினான்..
இவள் அவனை ஏமாற்றவில்லை....
தனி அறையில் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தாள்....
-கண்மணியின் அழுகை தொடரும்...
__________________________________________
கண்மணியின் காதல் - 7
இரவு முழுதும் அழுதுகொண்டே உறங்கிவிட்டால் கண்மணி....
அப்போதும் அவன் விடுவதாக இல்லை மீண்டும் கனவில் தோன்றி அவள் சோகத்தை எல்லாம் மகிழ்ச்சி ஆக்கினான்...
சேவல் சூரியனை எழுப்பியது...
கண்மணி தூக்கம் கலைந்தது...
மாயவன் கனவில் இருந்து மறைந்தான்..
நாளை திருமணம்...
மாயவனை பற்றி பெற்றோரிடம் சொல்ல முடிவெடுத்தாள்...
வேகமாக பெற்றோர் அறைக்கு சென்றாள்...
அங்கு அவர்கள் இல்லை..
வீடு முழுவதும் தேடினாள்..
பெற்றோர்கள் மாப்பிள்ளை அறையில் இருப்பதாக யாரோ தகவல் சொன்னார்கள்...
மாப்பிள்ளை அறைக்கு விரைந்தாள்..
அங்கு அவள் பெற்றோர் இல்லை...
மாப்பிள்ளை மட்டும் தனியாக இருந்தார்...
மாப்பிள்ளை கண்மணியின் அழகை பார்த்து வியந்து வெட்கப்பட ஆரம்பித்தார்..
-மாப்பிள்ளையின் வெட்கம் தொடரும்...
__________________________________________
கண்மணியின் காதல் - 8
மாப்பிள்ளையிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி விடலாம் என்று ஒரு நிமிடத்தில் முடிவெடுத்தாள்..
"என் கனவில் தினமும் தோன்றும் மாயவன் இல்லாமல் என்னால் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியாது" என்று கூற வாய் எடுத்தாள்..
அதற்குள் மாப்பிள்ளை "நான் உன்னிடம் ஒன்று சொல்லவேண்டும்" என்று கூறினான்..
அவளுக்கு அதிர்ச்சி...
"சரி கூறுங்கள்" என்று சொன்னாள்..
"இப்பொழுது வேண்டாம்... மதியம் உன் அறைக்கு வந்து சொல்கிறேன்" என்று மாப்பிள்ளை கூறிவிட்டார்..
"சரி" என்று சொல்லி வந்துவிட்டாள்...
இவள் மனதில் ஒரே குழப்பம்...
"என்ன சொல்லுவார்" என்று அச்சம்...
சோகமாக இருந்தது கண்டுபிடித்த விட்டார்களா என்கிற மன உளைச்சல்..
மாயவன் இனி நேரில் வர வாய்ப்பு சிறிதளவு கூட இல்லை..
எனவே மாயவனைப் பற்றி மாப்பிள்ளையிடம் சொல்வது வீண்..
இது மாப்பிள்ளையிடம் தெரிவித்தாள் பெற்றோருக்குத்தான் அவமானம் ஏற்படும் என்று பயந்தாள்..
கண்மணி மதியம் மாப்பிள்ளைக்காக காத்துக்கொண்டிருந்தார்..
-காத்திருப்பது தொடரும்...
__________________________________________
கண்மணியின் காதல் - 9
சூரியன் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது..
மதிய உணவு அனைவரும் சாப்பிட்டு முடித்தாகிவிட்டது..
கண்மணி மட்டும் மதிய உணவு உண்ணவில்லை..
மாயவனின் நினைவு மனதை வாட்டியது..
ஒருபுறம் மாப்பிள்ளை என்ன சொல்லப்போகிறார் என்ற எண்ணம்..
அறையின் வெளியே ஆண்களின் குரல் சத்தமாக கேட்டது..
அறையின் கதவைத் திறந்து பார்த்தால் மாப்பிளையும் மாப்பிள்ளை தோழர்களும் நின்றுகொண்டிருந்தனர்
கண்மணி சிறு புன்னகை செய்து மாப்பிள்ளையை அறைக்குள் அழைத்தாள்...
மாப்பிள்ளை தோழர்கள் மாப்பிள்ளையை கிண்டல் செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.
மாப்பிள்ளை அறைக்குள் நுழைந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தார்..
எல்லா ஆண்களிடமும் தைரியமாகப் பேசும் கண்மணி இவரை கண்டவுடன் சற்று தயக்கத்துடன் பேச ஆரம்பித்தாள்..
"மதிய உணவு சாப்பிட்டீர்களா" என்று கேட்டாள்..
"முடிந்தது" என்று அவர் பதிலளித்தார்..
"ஏதோ முக்கியமான விஷயம் என்று சொன்னீர்களே, என்ன" என்று அவன் கேட்டாள்...
மாப்பிள்ளை பேசத்தொடங்கினார்..
தனக்கு தினமும் ஒரு பெண் கனவில் தோன்றுவதாகவும், அவள் என்னுடைய கற்பனை பெண் பாத்திரம் என்றும்,
அவள் கனவு வராத இரவுகள் இல்லை..
நான் அவளை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தினம் தினம் நினைத்ததாகவும் அவளை முழுமையாக காதலித்ததாகவும் கூறினார்...
அவள் பெயர் "மாயவள்" என்றார்..
கண்மணிக்கு அதிர்ச்சி..
-அதிர்ச்சி தொடரும்....
__________________________________________
கண்மணியின் காதல் - 10.
கண்மணிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை...
நான் இந்த கதையை யாரிடமும் சொல்லவில்லை..
அப்படி இருந்தும்...
நம்மக்கு வந்தது போன்ற கனவு கதை மாப்பிள்ளை கூறுவது கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள் கண்மணி..
"கனவில் வந்த பெண்ணே மட்டுமே நான் திருமணம் செய்வேன் இல்லை என்றால் திருமணம் வேண்டாம்" என்று இருந்ததாகவும் மாப்பிள்ளை கூறினார்..
கண்மணி இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை
அதற்குள் கண்மணியின் கையை பிடித்த மாப்பிள்ளை...
"என் கனவு கதாபாத்திரமான "மாயவள்" நீ தான்,
உன்னை பார்த்த பிறகுதான் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னேன்" என்று கூறுகிறான்..
மாப்பிள்ளையை யாரோ அழைத்ததும் மாப்பிள்ளை கண்மணியிடம் விடைபெற்று சென்று விட்டார்..
கண்மணியின் மனசு இனம் புரியாத ஒரு அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை...
நாளை காலை திருமணம் இன்று இரவுக்குள் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்...
இனி மாயவன் வர 100 சதவீதம் வாய்ப்பில்லை..
மாயவனின் காதல் தோற்றது..
மாயவள் காதல் வென்றது..
ஆம் கண்மணி ஒருமனதாக முடிவு செய்துவிட்டாள்..
மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இனி நம் கனவில் மாயவன் வரக்கூடாது என்று முடிவு கட்டினாள்..
இரவு நெடுநேரமாகியும் தூங்கவில்லை கண்மணி...
நடு இரவில் தூங்கிய கண்மணியின் கனவில் மாயவன் தோன்றினான்..
"இதுவரை என்னை காதலித்துதற்கு நன்றி
கண்டிப்பாக என்றாவது ஒருநாள் நானே உன்னை வந்து நேரில் சந்திப்பேன்" என்று
கூறி...
எப்பொழுதும் சிரிப்புடன் வரும் மாயவன், கண்ணீருடன் மறைந்தான் கண்மணியின் கனவில் இருந்து.......
-மாயவன் கனவு முடிந்தது...
__________________________________________
உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி வணக்கம்
மாயவள் காதல வென்றது
ReplyDelete